காதலில் வெற்றி தோல்வி என்பது அவரவர் தலையெழுத்திற்கேற்பவே நடைபெறுகிறது போன்று தோன்றுகிறது. ஏன் என்றால் மனதில் உயர்ந்த தூய்மையான உண்மையான எண்ணங்களை கொண்டவர்கள் கதலில் அதிகம் தோற்றுப்போவதையும்.. தமது சுய தேவைகளுக்காக காதலை ஒரு ஊடகமாக பயன்படுத்திக்கொண்டு பல கீழ்த்தனமான எண்ணங்களை கொண்டு காதலை விளையாட்டாக செய்பவர்கள் காதலில் பெரும்பாலும் வெற்றி அடைவதையும் கணமுடிகிறது. நாம் எதிர்பார்க்கின்ற எண்ணங்கள் எளிதில் நிறைவடைவதில்லை.
தாம் உண்மையாக காதலித்து காதலில் தோல்வி அடைந்தவர்கள் அதன் பாதிப்பிலிருந்து விடுபடுவது இலகுவான காரியம் இல்லை. இருதலைக் காதலாக இருந்தாலென்ன ஒரு தலைக் காதலாக இருந்தாலென்ன அந்த சுகமான வலிகள் மரணத்தையும் தாண்டி வாழக்கூடியவை. அவ்வாறு காதல் தோல்வியை தமது வாழ்வின் தொல்வியாக எண்ணி தமது காதல் நினைவுகளை திரும்பத் திரும்ப மீட்டுப் பார்த்துக் கொண்டு இருக்கும் உறங்காத விழிகளை எமது வாழ்வில் அதிகம் காணக் கூடியவாறு உள்ளது.
தாம் உண்மையாக காதலித்து காதலில் தோல்வி அடைந்தவர்கள் அதன் பாதிப்பிலிருந்து விடுபடுவது இலகுவான காரியம் இல்லை. இருதலைக் காதலாக இருந்தாலென்ன ஒரு தலைக் காதலாக இருந்தாலென்ன அந்த சுகமான வலிகள் மரணத்தையும் தாண்டி வாழக்கூடியவை. அவ்வாறு காதல் தோல்வியை தமது வாழ்வின் தொல்வியாக எண்ணி தமது காதல் நினைவுகளை திரும்பத் திரும்ப மீட்டுப் பார்த்துக் கொண்டு இருக்கும் உறங்காத விழிகளை எமது வாழ்வில் அதிகம் காணக் கூடியவாறு உள்ளது.
இவ்வாறு காதலில் தோல்வி அடைந்தவர்கள் தமது உறுதியான அந்த காதலின் வேகத்தால் வைராக்கியமான பல முடிவுகளை எடுக்கின்றனர். இவ்வாறு தன்னிச்சையாக எடுக்கும் அந்த முடிவுகள் எவளவு தூரம் ஞாயமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்பதே கவனிக்க வேண்டியதாகும். இறைவன் உங்களது வாழ்க்கையை உங்கள் கையில்த்தான் கொடுத்துள்ளார். பிறருடைய கையில் இல்லை. எனவே உங்களுடைய வாழ்க்கையை இன்னொருவர் தீர்மானிக்கின்ற சக்தியை நீங்கள் பிறருக்கு கொடுக்கக்கூடாது. இன்னொருவர் செய்யும் அசட்டுத்தனமான வேலைகளிற்காக நீங்கள் எடுக்கும் முடிவு உங்களையே பாதிப்பதாக அமையலாமா?..
ஒரு தலையாக காதலித்து உங்கள் காதல் ஏற்றுக்கொள்ளப்படா விட்டால்..... நீங்கள் காதலித்தவர்
01) சில சமயங்களில் அவர் வேறுயாரையாவது காதலிக்கலாம்.
02) சிறு வயதிலேயே பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம்.
03) உங்களை விட தகுதியில் உயர்ந்தவர் தான் தன் கணவன் அல்லது மனைவியாக வரவேண்டும் என்று எண்ணுபவராக இருக்கலாம்.
இவ்வாறான காரணங்களால் உங்கள் காதல் ஏற்றுக்கொள்ளப் படாத சந்தர்ப்பத்தில் அதை உங்கள் தோல்வியாக கருதிக்கொள்வது உங்கள் தவறு தானே?...
நீங்கள் இருதலைக் காதலாக இருந்து பிரிந்திருக்கலாம். அந்தப் பிரிவிற்கு காரணம்..
01) வீட்டு அழுத்தம் காரணமாக உங்களை தூக்கி எறிந்திருக்கலாம்.
02) தனது தேவைக்காக காதலித்துவிட்டு உங்களை வெறுத்திருக்கலாம்.
03) தகுதி மற்றும் பண ஆசையால் உங்களை விட்டு வேறு ஒருவரைக் காதலிக்கலாம்.
04) பிறருடைய ஏவல்களை நம்பி உங்களை சந்தேகித்து மறுத்திருக்கலாம்.
இவ்வாறு காதல் கைதியாக அகப்பட்ட உங்களுக்கு அது தோல்விதான். ஆனாலும். மற்றவர் செய்த தவறுக்காக நீங்கள் தண்டனை அனுபவிக்க முடியுமா?..
இவ்வாறு ஏற்க முடியாத காரணங்களுக்காகவும்.. பிறருடைய தவறுக்காகவும் எமது முடிவுகள் எம்மை பாதிப்பதாக அமைக்காமல்.. யதார்த்தத்தையும் உண்மையையும் உணர்ந்து பழையனவற்றை மறந்து எமது வாழ்வின் சிறப்பான நிலைமைக்கான வழியை தேடுவது தான் சிறந்த வழி.

