ஜூன் 07, 2011

காதல் கவிதைகள் ( பாகம் - 3 ).

நினைவுகள்

நான்
சாகும் வரை
என்னை
சாகடித்துக் கொண்டு
இருக்கும் - உன்
நினைவுகள்..


 
நீ இல்லை என்றால் 
 
வடிகின்ற கண்ணீரின்
முதல் துளியும்
துடிக்கின்ற இதயத்தின்
இறுதித் துடிப்பும்
நீ இல்லை என்றால்
மட்டுமே..




காதல் சொல்ல வந்தேன்
 
பல தடவைகள்
காதல் சொல்லலாம்
என வந்தும்..
செய்வது என்னவென்று
புரியாமல்
ஏதும் சொல்லாமல்
பழைய நட்பாக 
மட்டும் பேசி
திரும்பி வந்திருக்கிறேன்.



உன்னை நினைத்து
 
உயிரிலே கலந்தவளே
உண்மையாக
உன்னை நேசிக்கிறேன்
உயிர் கூட அழுகுதடி
நீ இன்றி
உன்னை நினைத்து..



விடியவில்லை
 
விடியவில்லை
என் வாழ்வு
விழிகளில் வடிகிறது
கண்ணீர்
விம்மி அழுது
பார்க்கிறேன்
விரும்பியவளை மறக்க.



உன் வார்த்தைகள்
 
மனதார நேசித்தேன்
உன்னை..
மறந்து விட்டாய்
நீ என்னை
மனமுடைந்து போனேன்
மங்கை - உன்
வார்த்தையினால் (good bye)
மனம் விட்டுப் பேசும்
வலிமை எனக்கின்றி
மன நோயாளி
ஆனேன் இன்று.....



மறையும் வரை
 
மண்ணில் நான்
மறையும் வரை
மறைவதில்லை
என்றும்  உன் 
நினைவுகள்..



என் இளமை
 
நான் இளமையாக
வாழும் காலம்
விழி நீரோடு வாழும்
காலம் ஆனது
நான் உன் உயிரோடு
கலக்க நினைத்ததனால்.



உறங்காது

என் காதல்
உண்மையானதடி
அது என்றும் உறங்காது
உறங்கும் காலம்
வந்தால் உறங்கிவிடும் 
இந்த உடலும்..