உனக்காக
நீ என்னை
மறந்துவிட்டாய்
என்று எனக்கு
தெரியும்..
என் இதயத்திற்கு
தெரியாது..
அதனால் தான்
அது இன்னும்
துடித்துக் கொண்டு
இருக்கிறது
உனக்காக.!
தனிமை பிடிக்கும்
கனவுகள் பிடிக்கும்
நீ வருவதால்..
கண்ணீர் பிடிக்கும்
உனக்காக வருவதால்..
தனிமை பிடிக்கும்
உன் நினைவுகளுடன்
இருப்பதால்.
தொடர்கதை
பெண்ணே..!
கேட்க நினைப்பது
விடுகதையல்ல
அது
தொடர்கதை
இடை நின்றால்
என் செய்வேன்..?
ஏக்கம்
நீ சிரிக்கின்ற
நொடியில்
நான்
இரசிக்கவில்லை
பெண்ணே..
மரிக்கின்றேன்
உன்
ஏக்கத்தால்..!
நிலவு போன்றதடி
அன்பே
தாயம் இல்லை
என் காதல்...
பல முகம்
பார்ப்பதற்கு.
அது
நிலவு போன்றதடி
என்றும்
ஒரு முகம்.
மறப்பதா..?
மரணத்தை
விட
கொடுமையானது
ஒன்று
உண்டென்றால்
அது உன்னை
மறப்பது
தான்
கண்ணே...
மீண்டும்
அன்பே..
கடந்தகல்லூரிக்காலம்
வேண்டும்
உன்
பொன்னான
உறவுகளுடன்
எனக்கு..!
நீ வேண்டும்
அன்பே
நீ
இல்லாத
வாழ்வு
காற்றில்லாத
உலகை
போன்றதடி
T.Aynks.








