இதயம்
அன்பே - உன்
பிஞ்சுப் பாதங்கள்
முத்தமிட்ட
பாடசாலை மண்ணில்
எஞ்சியுள்ள
காலமெல்லாம்
வாழ்ந்துவிட
துடிக்குதடி
என் இதயம்.
அன்பே
அன்பே
கனவாகிப் போகலாம்
என் வாழ்வு.
கனவாகிப் போகாது
நான் உன் மீது
கொண்ட காதல்.
நீயின்றி
அன்பே - நீயின்றி
மலரற்ற செடிபோல்
என் இதயம்..
நீரற்ற ஆறு போல்
என் பயணம்..
நிலவற்ற இரவுபோல்
என் வாழ்வு
ஆனதை அறிவாயா??.
இரவுகள்
இரவுகள் எனக்கு
மிகவும் பிடிக்குதடி..
சுகமான அந்த
கடந்தகாலங்கள்
கனவில் என்னை
தேற்றுவதால்.
என்னுடன்
வாழ்வோடு
சாகும் காலமும்
நினைவோடு
வாழும் காலமும்
இன்று என்னோடு
ஆனதடி.
காத்திருப்பு
காத்திருப்பது கடினமடி..
நீ என்னை
கடந்து செல்லும்
காலம் வந்தால்
கருணைக் கொலை
செய்து விட்டுச் செல்
என்னை.
நட்பு - காதல்
அன்பே
உன் கை பிடிக்க
நினைத்ததால்
கணப் பொழுதில்
கனவாகிப் போனது
நம் நட்பு.
நட்பு
பெண்ணே..
இறைஞ்சுகிறேனடி
நானாக நானிருக்க
நட்பே - நீ
எனக்கு மீண்டும்
நட்பாக வேண்டும்.
கனவுகள்
கனவுகளில்
வரும் - உன்
நினைவுகளால்
காலையிலேயே
கலங்ககிறதடி
என் இதயம்..
உனக்கென
உனக்கென எண்ணி
வாழ்ந்த காலங்கள்
இது வரை..
உன்னை எண்ணி
வாழும் காலம்
இறுதி வரை..
BY :- T. Aynks.
