விஜய் (பிறப்பு - ஜூன் 22, 1974;
இயற்பெயர்:ஜோசப் விஜய் )
இயற்பெயர்:ஜோசப் விஜய் )
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] திரைப்படத்துறை
விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தற்பொழுது, விஜய்க்காக THALAPATHY ANTHEM என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பஸ் காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.[1]
[தொகு] வேறு துறை
இவர் விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார்.2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பர படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகை கடையின் விளம்பர படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார். [2][3]
[தொகு] அரசியல்
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.
[தொகு] இவர் நடித்த திரைப்படங்கள்
| ஆண்டு | படம் | பாத்திரம் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2013 | யோஹன்:அத்தியாயம் ஒன்று | |||||
| 2012 | துப்பாக்கி | |||||
| 2012 | நண்பன் | பஞ்சவன் பாரிவேந்தன் / பாரி / கொசக்சி பசபுகழ் | ||||
| 2011 | வேலாயுதம் | வேலு(எ)வேலாயுதம் | ||||
| 2011 | காவலன் | பூமிநாதன் | ||||
| 2010 | சுறா | சுறா | ||||
| 2009 | வேட்டைக்காரன் | ரவி / பொலிஸ் ரவி | ||||
| 2009 | வில்லு | புகழ் | ||||
| 2008 | பந்தயம் | விஜய் | ||||
| 2008 | குருவி | வெற்றிவேல் | ||||
| 2007 | அழகிய தமிழ் மகன் | குரு / பிரசாத் | ||||
| 2007 | போக்கிரி | சத்தியமூர்த்தி / தமிழ் | ||||
| 2006 | ஆதி | ஆதி | ||||
| 2005 | சிவகாசி | முத்தப்பா / சிவகாசி | ||||
| 2005 | சுக்ரன் | சுக்ரன் | ||||
| 2005 | சச்சின் | சச்சின் | ||||
| 2005 | திருப்பாச்சி | சிவகிரி | ||||
| 2004 | மதுர | மதுரைவேல் | ||||
| 2004 | கில்லி | சரவணவேலு / கில்லி | ||||
| 2004 | உதயா | உதயக்குமரன் | ||||
| 2003 | திருமலை | திருமலை | ||||
| 2003 | புதிய கீதை | சாரதி | ||||
| 2003 | வசீகரா | பூபதி | ||||
| 2002 | பகவதி | பகவதி | ||||
| 2002 | யூத் | சிவா | ||||
| 2002 | தமிழன் | சூர்யா | ||||
| 2001 | ஷாஜகான் | அசோக் | ||||
| 2001 | பத்ரி | பத்ரி | ||||
| 2001 | பிரெண்ட்ஸ் | அரவிந்த் | ||||
| 2000 | பிரியமானவளே | விஜய் | ||||
| 2000 | குஷி | சிவா | ||||
| 2000 | கண்ணுக்குள் நிலவு | கௌதம் | ||||
| 1999 | மின்சாரக் கண்ணா | கண்ணன்/காசி | ||||
| 1999 | நெஞ்சினிலே | கருணாகரன் | ||||
| 1999 | என்றென்றும் காதல் | விஜய் | ||||
| 1999 | துள்ளாத மனமும் துள்ளும் | குட்டி | ||||
| 1998 | நிலாவே வா | சிலுவை | ||||
| 1998 | பிரியமுடன் | வசந்த் | ||||
| 1998 | நினைத்தேன் வந்தாய் | கோகுல கிருஷ்ணன் | ||||
| 1997 | காதலுக்கு மரியாதை | ஜீவானந்தம் | ||||
| 1997 | நேருக்கு நேர் | விஜய் | ||||
| 1997 | ஒன்ஸ்மோர் | விஜய் | ||||
| 1997 | லவ் டுடே | கணேஷ் | ||||
| 1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் | கண்ணன் | ||||
| 1996 | செல்வா | செல்வா | ||||
| 1996 | மாண்புமிகு மாணவன் | சிவா | ||||
| 1996 | வசந்த வாசல் | விஜய் | ||||
| 1996 | பூவே உனக்காக | ராஜா | ||||
| 1996 | கோயம்புத்தூர் மாப்ளே | பாலு | ||||
| 1995 | சந்திரலேகா | ரகீம் | ||||
| 1995 | விஷ்ணு | விஷ்ணு | ||||
| 1995 | ராஜாவின் பார்வையிலே | விஜய் | ||||
| 1994 | தேவா | தேவா | ||||
| 1994 | ரசிகன் | விஜய் | ||||
| 1993 | செந்தூரப்பாண்டி | விஜய் | ||||
| 1992 | நாளைய தீர்ப்பு | விஜய் | கீர்த்தனா | |||
| 1987 | சட்டம் ஒரு விளையாட்டு | விஜய் | ||||
| 1985 | நான் சிவப்பு மனிதன் | விஜய் | ||||
| 1984 | வெற்றி | விஜய் |
[தொகு] பிண்ணனி பாடகர்
இவர் சில திரைப்பட பாடல்களுக்கு பிண்ணனி பாடகராக இருந்திருக்கிறார். அவை,| ஆண்டு | பாடல் | படம் | வேறு குறிப்புக்கள் |
|---|---|---|---|
| 2005 | வாடி வாடி | சச்சின் | |
| 2002 | கொக்கா கோல | பகவதி | |
| உள்ளதை கிள்ளாதே | தமிழன் | ||
| 2001 | என்னோட லைலா | பத்ரி | |
| 2000 | மிச்சிச்சிப்பி நதி குலுங்க | பிரியமானவளே | |
| சின்னன் சிறு | கண்ணுக்குள் நிலவு | ||
| இரவு பகலை | கண்ணுக்குள் நிலவு | ||
| 1999 | தங்கநிரதுகு | நெஞ்சினிலே | |
| 1998 | டிக் டிக் டிக் | துள்ளி திரிந்த களம் | |
| ரோட்டுல ஒரு | பெரியன்ன | ||
| தம்மடிக்கிற ஸ்டைல பாத்து | பெரியன்ன | ||
| காலத்துக்கு ஒரு கன | வேலை | ||
| சந்திர மண்டலத்தை | நிலாவே வா | ||
| நிலவே.. நிலவே | நிலாவே வா | ||
| மௌரிய மௌரிய | ப்ரியமுடன் | ||
| 1997 | ஓஹ பேபி பேபி | காதலுக்கு மரியாதை | |
| ஊர்மிளா ஊர்மிளா | ஒன்ஸ் மோர் | ||
| 1996 | சிக்கன் கரே | செல்வா | |
| அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி | காலமெல்லாம் காத்திருப்பேன் | ||
| திருப்பதி போனா மொட்ட | மாண்புமிகு மாணவன் | ||
| 1995 | பாம்பை பார்ட்டி ஷில்பா ஷெட்டி | கோயம்புத்தூர் மாப்ளே | |
| 1994 | தொட்டபெட்லே | விஷ்ணு | |
| 1994 | அடடா அலமேலு ஆவின் பசும்பாலு | தேவா | |
| 1994 | கோத்தகிரி குப்பம்மா | தேவா |
[தொகு] விருதுகள்
[தொகு] தமிழ் நாடு அரசின் திரைப்பட விருதுகள்
- காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
- திருபாச்சி(2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
[தொகு] விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியால் இந்நடிகருக்கு சில விருதுகள் வழங்கப்பட்டன. அவை| விருது | திரைப்படங்கள் | வருடம் | மூலம் |
|---|---|---|---|
| நாளைய சூப்பர் ஸ்டார் | திருப்பாச்சி, சிவகாசி | 2006 | [7] |
| இந்த ஆண்டின் கேளிக்கையாளர் | போக்கிரி, அழகிய தமிழ் மகன் | 2007 | [8] |
| விருப்பமான நாயகன் | வேட்டைக்காரன் | 2009 | [9] |
[தொகு] பிற விருதுகள்
- கில்லி(2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
- கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
- கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
- பொதுச்சேவை அறிவிப்பு(2005)-க்கு வெள்ளி விருது
- போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
- போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
- வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
