இன்பம் துன்பம் என்ற பிரிக்க முடியாத இரு விடையங்களுடன் வாழ்ந்து விட்டு முடிந்து போகும் எமது வாழ்க்கையில் பல வகையான மனிதருடன் பல வகையில் பழகி வருகிறோம். சம நோக்குடன் தொடங்கும் எம் பயணம் பல்வேறு சந்தர்ப்பங்களாலும் தேவைகளாலும் ஒரு சிலருடன் ஆழமான உறவைப் பலப்படுத்துகிறது. இவ்வாறு உறவுகளை வளர்க்கும் போது அவர்களுடனான பிரிவுகளை தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையை வளர்ப்பது தான் அவசியம்.
யாரையுமே அதிகமாக நேசித்துவிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் எமக்கு அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியும் உயிர் கனத்துவிடும். எனவே பழகத் தெரியம் வாழ்வில் விலகத் தெரிந்திருத்தல் அவசியம். இல்லையாயின் நண்பர்கள், காதலர்கள், உறவினர் என இவர்களிடையே ஏற்படும் பிரிவுகள் ஆழமாக நேசித்த மனதை மரணிக்க வைக்கும்.
யாரையுமே முற்றாக நம்பாதீர்கள். “ நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்” என்ற வாசகத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். "நான் என்றால் நான் தான்" என்பது தான் வலிகளை குறைப்பதற்கான வழி. ஒரு வேளை நீங்கள் யாருடனும் அவ்வாறு பழகியிந்தால் அவ் உறவை தெளிவுபடுத்துங்கள். இந்த உறவு சரியா? பிழையா? என சுயமாக சிந்தியுங்கள்.
“ பிரிவு என்பது எவராலும் தடுக்க முடியாத வலி” எனவே விலகத்தெரிய வேண்டும். இல்லையாயின் நீங்கள் பிறருக்கு அடிமையாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். எனெனில் எது எப்போது நடக்கும் என்று எவராலும் கூறிவிட முடியாது. எனவே மற்றவர்கள் உங்களை காயப்படுத்தும் போது அவரிடம் இருந்து விலகத்தெரிய வேண்டும். நீங்கள் பிரிவுகளை சந்திக்கும் போது அதை அப்படியே விட்டுவிடுங்கள். ஏனெனில் “ நினைவு என்பது யாராலும் திருட முடியாத பரிசு” ஆகையால் நாம் யாரோடு பழகினாலும் சரி விலகத்தெரியும் உத்தியை கையாளுதல் தான் துயரத்திலிருந்து விடுபடுவதற்கான வழி.
“பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்”
“துன்பத்தை ஏற்றுக்கொள்.. நீ தூக்கி வளர்த்த துன்பம் தான் அது.”
BY - T.Aynks.