பிப்ரவரி 24, 2012

பெயரியல் - உங்கள் பெயரின் முதலெழுத்து உங்கள் தலையெழுத்தை மாற்றும்.

  • ஒருவரின் வெற்றிக்கு மிக அதிகமாக உதவுவது பெயரின் முதல் எழுத்து. நாம் ஒரு வாகனத்தைச் செலுத்தும்போது அதன் முன் சக்கரம் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறதோ அதனைத் தொடர்ந்துதான் பின் சக்கரமும் செல்கிறது. அதுபோல் பெயரின் முதல் எழுத்து அதற்கு அடுத்து வரும் அனைத்து எழுத்துக்களுக்கும் சக்தியைத் தருகிறது. இந்த விஷயத்தைத்தான் முன்னோர்கள் எல்லாம் தலையெழுத்துப்படி நடக்கும் என்றனர்.

    ஒருவரது பிறப்பு எண், விதி எண்ணுக்கு ஏற்ப அவரது பெயரின் முதல் எழுத்து அமையாவிட்டால் அவர் எவ்வளவு முயற்சித்தாலும் முழுப்பலனை அடைய முடியாமல் போய்விடும் என்கிறது பெயரியல். ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் வரும் எண் விதி எண் எனப்படும். இந்த விதி எண்ணுக்கு ஏற்ப ஒருவரது பெயரின் முதல் எழுத்து அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அவர் தனது வாழ்க்கையின் முழுப்பலனையும் அனுபவிக்க முடியும். 
  • உங்களுடைய முதல் எழுத்தை கீழே தெரிவு செய்யுங்கள்
  • ..............................................................................................
  • A  B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z


`A' - முன்னேற்றத்தின் வழிகாட்டி

http://thalaippu.com/news/images/stories/demo/gallery/aravindar-stamp.jpg

பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

A எழுத்தில் சூரியக் கதிர்கள் எப்போதும் குவிக்கப்படுவதால், இந்த எழுத்தில் பெயர் துவங்குவோர் எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டே இருப்பர். இவர்கள் மக்களால் மிகவும் நேசிக்கப்படுவர். தாங்கள் சொன்னதுதான் வேதம் என்பர். அரசியல், ஆன்மீகம், மருத்துவம் ஆகியவை இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் பேசுவதைப் பிறர் வாய் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பர். உஷ்ண உடம்புக்காரர்கள். அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். வார்த்தைகள் அதிகாரத் தோரணையில் இருக்கும். அடங்கிப் போகமாட்டார்கள். ஏற்கும் எந்தப் பதவியிலும் சுதந்திரத்தை விரும்புவர். அடிமை வேலை செய்ய மாட்டார்கள். படிப்பிலும் கெட்டிக்காரர்.

ஏற்றுக்கொண்ட பதவியில் கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவர். உடம்பு ஒல்லியாக இருக்கும். இனக்கவர்ச்சியில் அதிக ஈடுபாடு இருந்தாலும் மாற்று இனத்தவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர். இவர்களுக்கு வாய்க்கும் துணைவி அல்லது துணைவர் கிழக்குப் பார்த்த வீட்டில் குடியிருந்தால் நன்மையாக அமையும்.

எதிலும் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். இரவுப்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வதை விரும்புவர். தோல்விகளை எப்படி வெற்றியாக்குவது என்பதை இவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். நேர்மையாளர்களான இவர்களுக்கு நாணயமான நண்பர்கள் அனேகம். நிர்வாகத்திறன் அதிகம். நாட்டுநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் இவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அதள பாதாளத்திற்குப் போய்விடுவார்கள்.

முதல் எழுத்தாக பெயரில் `A'யைப் பெற்ற பிரபலங்கள்
அரவிந்தர்
ஆல்பிரட் ஹிட்ச்கொக்
ஆல்பிரட் நோபல்
அன்னிபெசண்ட்
அனில் அம்பானி
அசிம் பிரேம்ஜி