நீங்கள் காதலிக்கிறீர்களா...?
அன்பே..
பக்கம் பக்கமாக
கவிதை எழுதுகிறேன்
ஒரு பக்கம்
மட்டும் கொண்ட
என் இதயச் சுவரில்
good bye என- நீ
எழுதிய பின்பும்..
மன்னிப்பாயா?..
வலி
வலி - அது
நீ
தந்த(தால்)
வரப்பிரசாதமடி
கண்ணே.
மரணம்
அன்பே
நீ போனால்
அதுவே எனக்கு
மரணம் தானே..?
என் வாழ்வில்
மரணம்
இருமுறையோ??..
ஏக்கம்
பெண்ணே
என்
காதலின்
ஏக்கம்
கல்லறையும்
தாண்டியது..
சுகமான வலி
அன்பே
உன் பிரிவு
சுகமான வலி
தாங்கிய
என் வாழ்வின்
தொடக்மடி..
good bye
வாழ்வின்
உயிர்
வலிக்கும்
நிமிடம் - அது
அன்பானவள்
சொல்லும்
good bye
தான்.
நன்றி
கல்லூரி தாயே
உனக்கு
நன்றி..
என்னவளை
என்னருகில்
வாழவைத்தவள்
நீ தான்.
இது தான் அதுவோ??
உன்னை பார்த்தபோது
காதல் வரவில்லை..
உன்னோடு பேசியபோது
காதல் வரவில்லை..
உன்னோடு பழகியபோது
காதல் வரவில்லை.
பிரிந்த பின் மட்டும்
உன்னையே நினைக்கிறேன்
இதுதான் அதுவோ..???
சொல்லடி பெண்ணே..!!
T.Aynks.







