‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது... புதிர், ஏமாற்றம், பயம், இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொருவிதமான உருவெடுத்துக்கொள்ளும். புரிந்துணர்வு தான் காதலில் வெற்றி தோல்வியில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகிறது.
ஆதி காலத்திலிருந்து மனிதர்களிடையே காதல் உணர்வு இருந்து வருகிறது. ஆனால், இப்போது நிலைமையே வேறு. அது அனைத்துத் தரப்பு மனிதர்களுக்கும், இன்றியமையாத பாடமாகிவிட்டது. காதல் புரிகிறவர்கள், காதலைப் புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனும் அவசியம் அற்றுப் போய், தான் காதலை எவ்வாறு புரிகின்றனரோ அதுதான் காதல் என்ற நிலைக்கு சென்றுவிட்டது, அதை பறைசாற்றும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
வாழ்க்கையைப் பற்றியும், நடைமுறை யதார்த்தங்களைப் பற்றியும் இரு மனங்களின் நிலைகள் பற்றியும் கவலைப்படாமல், வெறும் கற்பனைகளையும் கனவுகளையும் மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதால்த்தான் இன்றைய காதலர்கள் பரவலாகத் தோல்வியைச் சந்திக்கிறார்கள். வாழ்வின் ஓர் அங்கமாக மட்டுமே காதலைப் புரிந்து கொண்டவர்கள் அதில் வெற்றியடைகிறார்கள். வாழ்க்கை என்பதே நூறு சதவிகிதம் காதல் மயமானதுதான் என்று நம்பியவர்கள் அதில் தோல்வியடைகிறார்கள்.
சில காதலர்கள் தமது காதலை திரைப்படங்களில் வரும் காதலை போன்றது என எண்ணி காதலிக்கின்றனர். நிகழமுடியாத ஒன்றை எமது கண் முன் கொண்டுவரும் ஒரு ஊடகமாகவே திரைப்படங்கள் காணப்படுகின்றன. திரைப்படங்கள் முற்றிலும் நடைமுறை வாழ்க்கையில் நிகழக்கூடிய காதல் முறை காண்பிக்கப்படுவதில்லை. இதை எண்ணிப்பார்க்காத இவர்கள் காதலில் தோல்வியடைய மிகவும் பிரதான காரணமகின்றனர்.
மூன்று மணிதியலாதில் திரையில் வந்த காதலை பிரதி பண்ணும் இன்றைய காதலர்கள் இரு மனங்களுகிடயில் உண்மையன புரிந்துணர்வை ஏற்படுத்தாமல் அதையும் தாண்டி பாலுறவையும் பால் ஈர்ப்பையுமே மையக் கருவாகக் கொண்டு நகர்ந்து விட்டு பின் புரிந்துணர்வு பற்றி சிந்திக்கவே அவர்களின் உண்மையன சுயரரூபம் வெளிவருகின்றது இதனால் அவர்கள் தோல்வியடைவது அவர்களின் காதலில் மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கையிலும் கூட.
என் அன்பிற்கினிய காதல் உள்ளங்களே..!!! காதல் இரு மனங்களுக்கிடயிலான உண்மையன புரிந்துணர்வு தவிர பாலுறவோ பால்ஈர்ப்போ இல்லை நீங்கள் காதலிக்க முன் சற்று சிந்தியுங்கள் காதலை புரிந்து கொள்ளுங்கள். மாறாக நீங்கள் புரிந்து கொண்டதை காதல் என்று எண்ணி வாழ்வில் தோல்வியடயாதீர்கள். அவ்வாறு காதலை புரிந்துகொண்டு ஒரு தோல்வியை அடைவீர்களாயின் அது விதியின் சதியாக இருக்கும்.. அன்றி காதல் தோல்வியாகாது. “காதலர்கள் தான் தோல்வி அடைகின்றர்.. காதல் என்றும் தோற்பதில்லை” என்று கூறுவார்கள். புரிந்துணர்வு என்பது சிறப்பான வாழ்க்கையின் அடிப்படை. காதலில் மட்டும் என்ன விதிவிலக்கா???...
