ஏப்ரல் 26, 2011

காதலை தீர்மானிக்குமா கிரகங்கள்..??

         காதலின் வெற்றி தோல்வி என்பது கிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதா? மனித இனம் தோன்றிய காலம் முதல் காதல் உணர்வு மனிதர்களுக்கு இருப்பதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருந்தாலும்.. காதலின் வெற்றி தோல்விக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்...
       
     பெற்றோரால் மிகவும்  பாசமாக அதே சமயம் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட ஆண் பெண் கூட  திடீரென காதலில் விழுந்து அவசரத்திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் பல ஆண்டுகளாக காதலித்த போதும் திருமணம் செய்ய முடியாமல் பிரிந்து விடுகின்றனர். இதற்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உள்ளதா?
         காதல் என்பது முழுக்க முழுக்க மன எழுச்சி சம்மந்தப்பட்டது. அந்த மன எழுச்சியை தூண்டுவது கிரகங்கள். ஒரு பெண்ணை ஒரு ஆடவன் பாக்கத் தூண்டுவதும் ஒரு ஆடவனை ஒரு பெண் பார்க்கத்தூண்டுவதும் சந்திரனும் சூரியனும் தான். இவை இரண்டும் கண்களுக்குரிய கிரகங்கள். ஆரம்பத்தில் கண்கள் வழியாகவே காதல் ஏற்படுகிறது. பின்னரான செயல்களை தூண்டுவது சுக்கிரன் ஆகும். இதில் ஒழுங்கு முறைகளை கொண்டு வருவது செவ்வாய் கிரகத்தின் வேலை. காதலில் சிலர் பலவகையான மன உறுதிப்பாட்டுடன் இருக்கிறார்கள்.
            காதலுக்காக இரத்தம் சிந்தவும் தயார் என வீர வசனம் பேசுபவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் நேர் மறையாக இருக்குமாம். அதே செவ்வாய் எதிர் மறையாக இருந்தால் காதலை இழந்து தவிப்பார்களாம். சூரியன் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் ஆகிய 4 கிரகங்களின் பங்களிப்பு காதலுக்கு தேவைப்படுகிறது. இந்தக் கிரகங்களை கொண்டுதான் ஒருவருடைய காதல் வெற்றி பெறுமா.. தோல்வி அடையுமா.. என தீர்மானிக்க முடியுமாம். இது மட்டுமன்றி காதலிக்கும் காலத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு  என்ன தசாபுக்தி நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டுமாம். ஏழரைச் சனியில் காதலிப்பவர்கள் அந்தக்கால கட்டம் முடிந்தவுடன் பிரிந்து விடுவார்களாம். இது அஸ்டமத்து சனி காலகட்டத்திற்கும் பொருந்துமாம்..!!

T.Aynks